தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி திருச்சியில் இருந்து அக்டோபர் 22-ம் தேதி பிற்பகல் 2:15 மணியளவில் புறப்படும் ரயில் இரவு 7 மணி அளவில் தாம்பரத்தை சென்றடையும். இதனையடுத்து தாம்பரத்திலிருந்து அக்டோபர் 27-ஆம் தேதி இரவு 9:40 மணியளவில் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் திருச்சியை சென்றடையும். வருகிற 22-ம் தேதி தாம்பரத்திலிருந்து இரவு 10:20 மணிக்கு புறப்படும் ரயில் 23-ம் காலை 9 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
வருகிற 26-ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 5:50 மணி அளவில் புறப்படும் ரயில், மறுநாள் காலை 4 மணியளவில் தாம்பரத்தை சென்றடையும். அக்டோபர் 24-ஆம் தேதி மாலை 4:20 மணி அளவில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 6:20 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். வருகிற 25 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 3:20 மணியளவில் தாம்பரத்தை சென்றடையும். இந்த ரயில்களுக்கு முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.