Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…!! தமிழகத்தில் அடுத்த 5 வருடங்களுக்குள் அனைவருக்கும் இலவச வீடு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால்  பல்வேறு விதமான நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விஷ்வந்தாங்கல், கீழ் சிறுபாக்கம், நல்லவன் பாளையம், கீழ் செட்டிபட்டு, மேல் செட்டிபட்டி ஆகிய 5 ஊராட்சிகளில் மக்கள் குறை கேட்டு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு  கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு அமைச்சர் எ.வ. வேலு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, முறையான கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றித் தரப்படும். அதன்பிறகு முறையற்ற மற்றும் தகுதியற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். உங்களுடைய கோரிக்கைகள் மற்றும் நிராகரிப்புகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள். அதன் பிறகு தமிழகத்தில் அடுத்த 5 வருடங்களில் யாருமே வீடு இல்லாமல் இருக்க மாட்டார்கள். ஏனெனில் வீடு இல்லாத அனைத்து மக்களுக்கும் அடுத்த 5 வருடங்களுக்குள் இலவச வீடு கட்டி தரப்படும். மேலும் தமிழகமானது குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |