தமிழகத்தில் ஆதார் எண்ணுடன் மின் கட்டண எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் பிறகு ஆதார் எண்ணை மின்கட்டண எண்ணுடன் இணைக்காவிட்டால் மின்கட்டணம் செலுத்த முடியாது என்று பரவும் தகவல்கள் உண்மை கிடையாது என அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் விளக்கம் அளித்திருந்த நிலையில் தற்போது வரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆதார்-மின் இணைப்பை செய்துள்ளனர். இந்நிலையில் ஆதார் எண்ணை மின் கட்டண எண்ணுடன் ஒரே சமயத்தில் பலர் ஆன்லைனில் இணைப்பதால் சர்வர் பிரச்சினை வருகிறது.
அதன் பிறகு ஆதார் நகலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆதார் எண்ணை மின்கட்டன எண்ணுடன் இணைக்கும் போது ஆதார் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக ஆதார் நம்பரை மட்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்தால் போதுமானது. மேலும் மின் நுகர்வோர்கள் https://nsc.tnebltd.gov.in/adharupload/என்ற இணையதளம் முகவரிக்குள் சென்று ஆதார்-மின் இணைப்பை செய்து கொள்ளலாம்.