அரசு பணியாளர்களின் ஒய்வு வயதை 60 ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தலை மனதில் வைத்து மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுடைய பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது ஏற்கனவே 58 ஆக இருந்தது. இதையடுத்து கடந்த வருடம் ஏழாம் தேதி கொரோனா காலத்தின் போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் அரசாணை அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தி குறிப்பில், “தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மேலும் ஒரு வருடத்திற்கு அதாவது 60 வயதாகவும் உயர்த்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஓய்வு வயது 60 ஆக அதிகரித்துள்ளதால் 10,000 கோடி அளவுக்கு ஓய்வூதிய பயன்கள் வழங்குவது இந்த வருடம் மிச்சமாகும் என்று அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.