சென்னை புழல் சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்தனர்.
சென்னை புழல் சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனை சிறையுலும், 1500க்கும் மேற்பட்ட கைதிகள் விசாரணை சிறையிலும் பெண்கள் சிறையில் 100-க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கொரோனாவை தடுக்கும் வண்ணம் கடந்த 24ஆம் தேதி முதல் கைதிகளை நேரில் பார்க்க குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கைதிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
கைதிகளின் மன உளைச்சலை குறைக்கும் விதமாக சூப்பிரண்ட் செந்தாமரைக்கண்ணன் அசத்தல் முடிவு ஒன்றை எடுத்தார். அதில், நேரில் பார்க்க முடியாத உங்கள் குடும்பத்தினரை வீடியோகால் மூலம் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். 5 நிமிடம் பேசிக் கொள்ளலாம் என அறிவித்தார். அதன்படி,
தண்டனை சிறைக்கு 5 விசாரணை சிறைக்குள் 8 பெண்கள் சிறைக்கு ஒன்று என 14 ஆண்ட்ராய்ட் மொபைல்கள் கைதிகளிடம் பகிர்ந்தளித்து வீடியோகால் மூலம் அவர்களது குடும்பத்தாருடன் பேச வசதிகள் செய்யப்பட்டது. ஒவ்வொரு கைதியும் ஐந்து நிமிடம் மட்டுமே பேச முடியும். அனைத்து கைதிகளும் வீடியோ காலில் பேசி முடித்த பின்பு சிறை சூப்பிரண்டு செந்தாமரைக் கண்ணனுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.