Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”தொடக்க கால அரசியல்” பாஜகவில் மோடியின் முதல் பணி…!!

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தொடக்க கால அரசியல் என்ற  கட்டுரைகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

பிரதமர் இந்திராகாந்தியின் எமர்ஜென்ஸி நாட்டையே உலுக்கியது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தடை விதித்தது மட்டுமல்லாமல் அந்த அமைப்பின் முக்கிய தலைவர் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சில முக்கியமான தலைவர்களை பாதுகாக்கும் பணி பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் சுப்பிரமணியசாமி , ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்கள் தலைமறைவாகி இருப்பதற்கும் உதவினார் மோடி.

மேலும் எமர்ஜென்ஸி காலகட்டத்தில் தன் அரசியல் குருவான அத்வாணியை முதல் முதலில் சந்திக்கிறார் மோடி. அந்த சமயத்தில் அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கும் பணியிலும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுகிறார். மோடிக்கு எமர்ஜென்சி பல்வேறு அனுபவங்களை கற்றுக் கொடுத்திருந்தது.1978 ஆர்எஸ்எஸ் பிரச்சாராக இருந்த மோடி சூரத் மற்றும் வதோதரா பகுதிகளில் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் ஈடுபட்டு இருந்தார்.

பின்னர் 1979 ஆர்எஸ்எஸ் பணிக்காக டெல்லி சென்ற இவருக்கு எமர்ஜென்சி வரலாற்றில் ஆர்எஸ்எஸின் பங்கு குறித்து ஆராய்ந்து எழுதும் பணி வழங்கப்பட்டு இருந்தது.1980 ஆம் ஆண்டு ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து வந்த அத்வானியும் , வாஜ்பாயும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உதவியுடன் பாஜக என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.

இந்துத்துவா கொள்கையை நாடு முழுவதும் பரப்ப இயக்கம் மட்டும் போதாது என்று உணர்ந்த ஆர்எஸ்எஸ் தன் கொள்கைகளை பின்பற்றும் பாஜகவை முழுமையாக ஆதரித்தது. 1985 ஆர்எஸ்எஸ் மூலம் பாஜகவிற்கு அனுப்பப்பட்ட மோடி 1987 ஆம் ஆண்டில் பாஜக உறுப்பினர் ஆனார். பாஜகவில் அவருக்கு கொடுக்கப்பட்ட முதல் பணி அகமதாபாத் உள்ளாட்சித் தேர்தல்தான். அந்த தேர்தலில் பாஜக பிரச்சாரங்களை ஒருங்கிணைக்க உதவியாக இருந்தார் மோடி. இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது இதனால் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது.

Categories

Tech |