பிரதமர் மோடியில் பிறந்தநாளாளில் அவரின் குஜராத் அரசியல் காலம் குறித்து சிறப்பு கட்டுரை தொகுப்பை காண்போம்.
அகமதாபாத்தில் உள்ளாட்சி தேர்தலில் மோடிக்கு கொடுக்கப்பட்ட முதல்பணியை மிக கட்சிதமாக செய்ததை தொடர்ந்து 1988 பாஜகவின் குஜராத் மாநிலத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் தேர்வானார் மோடி. 1990-இல் அத்வானியின் ரத யாத்திரையில் பணி மோடியிடம் கொடுக்கப்பட்டது.இதுவே மோடிக்கு கொடுக்கப்பட்ட தேசிய அளவிலான பெரிய பணியாகும். இந்த பணியை செவ்வனே செய்து காட்டினார் மோடி. ஏற்கனவே அத்வானியிடம் நல்ல பெயர் பெற்றிருந்த மோடி இன்னும் நெருக்கமானார்.
பின்னர் 1995 ஆம் ஆண்டு குஜராத்தில் பாஜக ஆட்சி அமைத்து கேசுபாய் பட்டேல் முதலமைச்சர் ஆனார்.மோடியை குஜராத் பாஜக வின் பொதுச்செயலாளர் ஆக்கியது பாஜக தலைமை. பின்னர் பஞ்சாப் , அரியானா மற்றும் இமாச்சல் போன்ற மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்தும் பணி மோடிக்கு கொடுக்கப்பட்டது. அந்தப் பணியையும் சிறப்பாக செய்து முடித்தார் மோடி.இந்த செயல்பாடுகளால் மாநில அளவில் இருந்த மோடியின் அந்தஸ்து தேசிய அளவில் மாறியது.
இதை தொடர்ந்து 1998_ஆம் ஆண்டு பாஜக வின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் மோடி. 2001 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை தழுவுகிறது. அதையடுத்து அக்டோபர் மாதம் 6_ஆம் தேதி குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் ராஜினாமா செய்ததன் காரணமாக பாஜகவின் தேசியத் தலைமை மோடியை குஜராத் முதல்வராக நியமித்தது. பாரதிய ஜனதா கட்சியின் தனிப் பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் மாதம் 7_ஆம் தேதி குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார்.
பின்னர் 24_ஆம் தேதி பிப்ரவரி மாதம் 2002 ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் ராஜ்கோட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அஸ்வின் மேத்தாவை 14, 728 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார் மோடி. ஆனால் அடுத்த மூன்றே நாட்களில் பிப்ரவரி 27 இல் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இன்றுவரை மோடியின் மீது படிந்துள்ள அழிக்க முடியாத ஒரு கரும்புள்ளியாக உள்ளது.
இதை தொடர்ந்து அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மணிநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஓசாஎதின்பாய் நரேந்திரகுமாரை 38, 256 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து 2-வது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. இம்முறை முதலமைச்சர் ஆனாலும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை வைத்து மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டது. இதற்கு ஒரே வழி குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிப்பது தான் என்று அந்த பணியில் தீவிரமாக உழைத்தார் மோடி.
குஜராத் மாநிலத்திற்கு பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கினார் , புதிய தொழில் தொடங்குவதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்தார்.இதன் காரணமாக பல்வேறு புதிய தொழில் கட்டமைப்பு உருவாகியது. அதன்பின்தான் குஜராத்தின் வளர்ச்சி என்பது அதிவேகமாக வளர்ந்தது , அதன் கூடவே மோடியின் பெயரும் சேர்ந்தே வளர்ந்தது.அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த குஜராத்தில் சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி மின்மிகை மாநிலமாக மாற்றினார் மோடி.