இதையடுத்து அடுத்த மூன்றே நாட்களில் பிப்ரவரி 27_இல் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி. ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இன்றுவரை மோடியின் மீது படிந்துள்ள அழிக்க முடியாத ஒரு கரும்புள்ளியாக உள்ளது. அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மணிநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின ஓசாஎதின்பாய் நரேந்திரகுமாரை 38, 256 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து 2-வது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் நரேந்திர மோடி.
மோடி முதலமைச்சர் ஆனாலும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை வைத்து மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டன. இதற்கு ஒரே வழி குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிப்பது தான் என்று அந்த பணியில் தீவிரமாக உழைத்தார் மோடி. பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கினார். புதிய தொழில் தொடங்குவதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்தார். இதன் காரணமாக பல்வேறு புதிய தொழில் கட்டமைப்பு உருவாகியது. இதன் பின் தான் குஜராத்தின் வளர்ச்சி என்பது அதிவேகமாக வளர்ந்து. அதன் கூடவே மோடியின் பெயரும் சேர்ந்தே வளர்ந்தது.
மோடி முதல்வராக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த குஜராத்தில் சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்துதல் மூலம் மின்மிகை மாநிலமாக மாறியது. இதையடுத்து வளர்ச்சி என்ற போர்வையில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்ச்சி அடைய வைத்ததாக பல்வேறு விமர்சனங்களும் மோடிக்கு எதிராக கூடவே எழுந்தது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வசதிகளை போல அந்த மாநிலத்தில் விவசாயத்திற்கும் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்திருந்தார் மோடி. பின்னர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக குஜராத் முதல்வர் பதவியை அலங்கரித்தார். இதனால் குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை செய்தார் மோடி.
குஜராத் மாநிலத்தில் பல்வேறு துறைகளில் தன்னிறைவு பெற்று விளங்கியது. மேலும் மோடி கொண்டுவந்த இகவர்ணன்ஸ் திட்டம் ஊழல் குறைவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்து குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பின்தான் மோடியின் மீது படிந்திருந்த அந்த கருப்பு புள்ளி மறைய தொடங்கியது.
பிரபல பத்திரிக்கையாளர் ரூத்தன் போரா தன்னுடைய கட்டுரை ஒன்றில் வைப்ரட் என்ற குஜராத் திட்டத்தின் கீழ் 84 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை பூர்த்தி செய்யப்படவில்லை தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் குஜராத் நாட்டின் ஐந்தாவது இடத்தில் இருப்பது உண்மைதான் என்று தெரிவித்தார். அதே நேரம் நரேந்திர மோடி பொறுப்புக்கு வருவதற்கு முன்னரும் குஜராத் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகவே இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.
நரேந்திர மோடியின் அரசு மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்களின் ஆல் குஜராத் மக்கள் அனைவரும் பலன் அடைந்துள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக 2012_ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநிலத் தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்று இந்திய அரசியலில் மாபெரும் சாதனைப் படைத்தார். இந்த நிகழ்வு மோடியின் பெயர் பாஜகவில் மட்டுமின்றி இந்திய தேசம் முழுவதும் மோடியின் செல்வாக்கு உயர மிக முக்கிய காரணமானது. இந்தியா முழுவதிலும் மக்களின் செல்வாக்கை அதிகம் இருப்பதால் பல்வேறு இடங்களில் அத்வானிக்கு பதில் மோடியை முன்னிறுத்தியது பாஜக.