Categories
இந்திய சினிமா சினிமா

#HappyIndependenceDay : தனது மனைவியுடன்….. தேசியக் கொடி ஏற்றினார் ராக்கி பாய்….!!

75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி தனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார் நடிகர் யஷ்..

இன்று நாட்டின் 75 வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்  விடுத்திருந்தார்.. இந்த வேண்டுகோளுக்கிணங்க சினிமா பிரபலங்கள் தொடங்கி, அனைத்து மக்களும் வீடுகளில் கொடியேற்றி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று தனது வீட்டில் தனது மனைவியுடன் சேர்ந்து தேசியக் கொடி ஏற்றினார் பிரபல நடிகர் யஷ். தனது ட்விட்டர் பக்கத்தில் யஷ், இந்தியாவின் மூவர்ணக்கொடி உலகம் முழுவதும் பரவட்டும், மகத்துவம் ஒவ்வொரு இந்தியரும் பெருமையுடன் ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறுகிறார்கள். அனைவருக்கும் 76வது சுதந்திர அமிர்த மஹோத்சவ் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.. கே ஜி எஃப் மற்றும் கேஜிஎப் 2 இந்த இரண்டு படங்கள் மூலம் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் மிகப்பெரிய அறியப்பட்ட ஒரு ஸ்டார் நடிகராக மாறியுள்ளார் யாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |