மக்களுக்கு வீடுதேடி மாத்திரை, மருந்துகளை வழங்கும் மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை வரும் ஐந்தாம் தேதி முதல்வர் துவங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதில் முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கும் தொடர்ச்சியாக ஒரு கோடி பேர் வரையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட நீரிழிவு, சர்க்கரை நோய், சிறுநீரகப் புற்றுநோய், காச நோய், சிறுநீரக மாற்று சிகிச்சை, முடக்குவாதம் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருந்தகங்களை நாடவேண்டிய சூழல் உள்ளது.
இதன் காரணமாக அவர்களுக்கு நேரடியாக சென்று மருந்துகளை பெற முடியாத நிலையில் அவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று மருந்து மாத்திரைகளை வழங்கும் மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.