பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வென்றதற்கு ஹர்பஜன்சிங் இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ! என்று ட்வீட் செய்துள்ளார்.
ஐ.பி.எல் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து RCB அணி களமிறங்கி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை பொறுமையாக ஆடி 17.4 ஓவர்களில் 71/3 விக்கெட் இழந்து இலக்கை எட்டியது.இந்த போட்டியில் ஹர்பஜன்சிங் 4 ஓவர்கள் சிறப்பாக பந்து வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.
Super Singham of the match with the silverware! #WhistlePodu #Yellove #CSKvRCB 🦁💛 pic.twitter.com/H0wpywT9wE
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2019
ஹர்பஜன்சிங் சென்னைக்கு வந்ததில் இருந்தே அடுத்தடுத்து தமிழில் ட்வீட் செய்து அசத்தினார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் வென்றதையடுத்து தமிழில் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய ஐபிஎல் ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் சென்னை ஐபிஎல் என்ன RCB டுவீட்ஸ் இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ!ரோல்லிங் சார்!தந்தானி நானே தானி தந்தானோ” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ!ரோல்லிங் சார்!தந்தானி நானே தானி தந்தானோ #CSKvsRCB pic.twitter.com/bCqPlUl0tt
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 23, 2019