டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றததையடுத்து ஹர்பஜன்சிங் ட்விட்டரில் வழக்கம் போல் தமிழில் ட்வீட் செய்து கலாய்த்துள்ளார்.
12 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 6 ஆவது ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில்நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாட்சன் 46, ரெய்னா 30 ,டோனி 32 ரன்கள் குவித்தனர்.
இந்நிலையில் வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் டெல்லி அணியை மரண கலாய் கலாய்த்துள்ளார். அதில் “வரவேற்றது வேணும்னா நீங்களா இருக்கலாம் ஆனா வழியனுப்பி வைக்கிறது எப்பவுமே நாங்கதான் காற்றைக்கிழித்து பறக்கும் என் சென்னை அணி கொடி நிழலில் டெல்லி அணி இளைப்பாற தலைநகரம் முழுதும் தல நகரமாய் வெற்றி முழக்கத்தில் ஆர்பரிக்க #DCvsCSK டில்லிக்கு நீ பாதுஷான்னா மெட்றாசுக்கு நான் கபாலி” என்று குறிப்பிட்டுள்ளார்.
வரவேற்றது வேணும்னா நீங்களா இருக்கலாம் ஆனா வழியனுப்பி வைக்கிறது எப்பவுமே நாங்கதான் காற்றைக்கிழித்து பறக்கும் என் @chennaiipl கொடி நிழலில் @DelhiCapitals இளைப்பாற தலைநகரம் முழுதும் #தல நகரமாய் வெற்றி முழக்கத்தில் ஆர்பரிக்க #DCvsCSK டில்லிக்கு நீ பாதுஷான்னா மெட்றாசுக்கு நான் கபாலி
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 26, 2019