இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் மறைவிற்கு ஹர்பஜன் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விபி சந்திரசேகர் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த போது அவர் வேட்டியால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக கிடந்தார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து வந்த மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Very shocking to hear VB Chandrashekhar indian cricketer is no more.. very sad news .. very young to go.. rest in peace VB.. Big lose ☹️ condolences to the family 🙏🙏 @CSKFansOfficial @ChennaiIPL @BCCI
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 15, 2019