Categories
கிரிக்கெட் புதுக்கோட்டை விளையாட்டு

7 வயது சிறுமி வன்கொடுமை… நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்… ரொம்ப கஷ்டமா இருக்குயா… ஹர்பஜன் சிங் வேதனை..!!

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, “நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்” என்று  ஹர்பஜன் சிங் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

இந்த சூழலில் உயிரிழந்த அந்த சிறுமியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்.. இதற்கிடையே சமூகவலைதளங்களில், #JusticeforJayapriya என்ற ஹேஷ்டாக் பயன்படுத்தி  சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா”.. என்று வேதனையுடனும், ஆதங்கத்துடனும் தெரிவித்துள்ளார்..

Categories

Tech |