மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் ட்விட்டரில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
15-ஆவது ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதன் பின் இலக்கை துரத்திய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அத்துடன் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தோல்வி குறித்து சென்னை அணியின் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். “அதில் அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும். உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள், தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் @ChennaiIPL @IPL “தோல்வியின்றி வரலாறா” என்று பதிவிட்டுள்ளார்.
அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள்,தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் @ChennaiIPL @IPL "தோல்வியின்றி வரலாறா" @CSKFansOfficial #Yellove
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 3, 2019