ஹர்பஜன்சிங்- லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது .
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த லாஸ்லியாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது . தற்போது லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ள முதல் திரைப்படம் ‘பிரண்ட்ஷிப்’. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ், எம் எஸ் பாஸ்கர் ,அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .
#FriendshipMovieTeaser from tomorrow evening 😍😍😍@harbhajan_singh @akarjunofficial @JPRJOHN1 #Losliya @shamsuryastepup
@DmUdhayakumar @cskshan @JSKfilmcorp @RIAZtheboss @CinemaassS pic.twitter.com/gLZeCIcDRF— Sathish (@actorsathish) February 28, 2021
தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜான் பால்ராஜ் இயக்கியுள்ளார் . இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது . மேலும் நடிகை லாஸ்லியா பிக்பாஸ் பிரபலம் தர்ஷனுடன் இணைந்து ‘கூகுள் குட்டப்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.