Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆனந்தக் கண்ணீர்னு சொல்ற அந்தத் தருணம் இதுதான்” தமிழ் சிஎஸ்கே ரசிகர்களால் நெகிழ்ந்த ஹர்பஜன்..!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ் உறவுகள் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சி.எஸ்.கே அணியில் சேர்ந்ததில் இருந்து அடிக்கடி தமிழில் ட்விட் செய்து வருவதால் இவருக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. ஐபிஎல்லில் சிஎஸ்கேவின்  ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் ட்விட்டரில் தமிழில் வசனங்கள் பதிவிட்டு ரசிகர்களுடன் நெருக்கமாகி வருகிறார்.

Related image

இதனால் இவரை தமிழ் புலவர் என்று ரசிகர்கள் அன்பாக அழைக்கின்றனர். தமிழில் ட்விட் செய்வதோடு மட்டுமில்லாமல் வேட்டி கட்டி டான்ஸ் ஆடுவது, சிலம்பம் சுற்றுவது என்று முழுமையாக தமிழனாகவே மாறிவிட்டார். ஏதாவது தமிழ் பண்டிகைகள் வந்து விட்டால் போதும் உடனே தமிழர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவிப்பார்.

Image result for ஹர்பஜன் சிங் வேட்டி

நேற்று 39- வது  பிறந்த நாளை கொண்டாடிய ஹர்பஜனுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பதிலுக்கு இவரும் நன்றி தெரிவித்து வருகிறார். தமிழ் ரசிகர்களும் ஹர்பஜனை வாழ்த்து மழையில் நனைத்துள்ளனர்.

இந்நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ் உறவுகளுக்கு ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதில், என் பிறந்தநாள்ல என்ன வாழ்த்துன தமிழ் உறவுகள் எல்லாருக்குமே ரொம்ப நன்றி. இன்னுமும் வாழ்த்துகள் வந்துகிட்டே இருக்கு. ஆனந்தக் கண்ணீர்னு சொல்ற அந்தத் தருணம் இதுதான்னு எனக்கு தோணுது.இந்த அன்பும் ஆதரவும் என்னைக்கும் தொடரணும்.தமிழ் மற்றும் சிஸ்கே ரசிகர்களால் நான்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |