இன்று முதல் ஃபாஸ்டேக் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதாவது ஃபாஸ்டேக் படுத்தப்படாத கார் மற்றும் வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் சுங்கச் சாவடிகளில் நுழையும் போது இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டணங்களில் உள்ள அனைத்து பாதைகளும் இப்போது பிப்ரவரி 15 நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்படுகிறது. எனவே எந்த ஒரு வாகனமும் படுத்தப்படாமல் அல்லது செல்லுபடியாகாத ஃபாஸ்டேக் வைத்திருத்தால் அது சுங்க சாவடிகள் நுழையும் போது இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் .
டிஜிட்டல் பயன்முறையின் மூலம் கட்டணத்தை மேலும் ஊக்குவிப்பதற்கும், காத்திருப்பு நேரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கும், சுங்கச் சாவடிகள் வழியாக வாகனங்கள் தடையின்றி செல்லவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜனவரி 1, 20 21 முதல் அமல்படுத்தப்படும் m&n வகை மோட்டார் வாகனங்களில் ஃபாஸ்டாக் பொருத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எம் என்பது பயணிகளை ஏற்றி செல்ல குறைந்தபட்சம் நான்கு சக்கர வாகனங்களை கொண்ட மோட்டார் வாகனம். என் என்பது ஒரு மோட்டார் வாகனத்தை குறிக்கும். குறைந்தது நான்கு சக்கரங்களை கொண்ட பொருள்களை எடுத்துச் செல்ல பயன்படும் பொருள்களுக்கு, கூடுதலாக நபர்களையும் கொண்டு செல்லும்.
ரீசார்ஜ் செய்வது எப்படி:
ஃபாஸ்டேக் இரண்டு வழிகளில் பெறலாம். ஒன்று பேடிஎம் மற்றும் இரண்டாவது வங்கிகள் மூலம் பயன்படுத்த முடியும். வங்கிகளைப் பொறுத்த வரை கட்டணம் நேரடியாக கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
பேடிஎம் போன்ற மொபைல் கட்டண முறைகளை பொருத்தவரை பயனர்கள் தங்கள் பயணத்திற்கு முன்பாக தங்கள் பணப்பையை தேவையான அளவு ரீச்சர் செய்திருக்கவேண்டும்.
இதனை யுபிஐ, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு நெட்பேங்கிங் போன்றவற்றின் மூலம் ரீசார்ஜ் செய்யமுடியும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் எச்டிஎஃப்சி உள்ளிட்ட பல வங்கிகள் பாஸ்ட்ராக்கை வழங்குகின்றன.
பேடிஎம் மற்றும் ஏர்டெல் பேமென்ட் போன்ற சேவைகளை பயன்படுத்தி சில முக்கிய மற்றும் வசதியான வழிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
ஃபாஸ்டேக் மூலம் டோல்கேட்களில் வரிசைகளை கட்டுப்படுத்துவதோடு மனித தொடர்புக்கான தேவைகளையும் நீக்குகின்றது.