கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா அதிவேகமாக அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஐ.பி.எல் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி முன்னணி வீரர்கள் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 232 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழந்து 198 ரன்கள் குவித்தது.
இதில் மும்பை அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருந்த போதிலும் ஹர்திக் பாண்டியா 34 பந்துகளில் 91 ரன்கள் (9 சிக்ஸர், 6 பவுண்டரி) விளாசினார். இவர் அதிரடியாக விளையாடி அதிவேகமாக 17 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதுவே இந்த ஆண்டு ஐபிஎல்லின் அதிவேக அரைசதமாகும். இதற்கு முன்பு ரிஷப் பண்ட் 18 பந்துகளில் அரைசதம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.