இங்கிலாந்து இளவரசரான ஹரி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்ப புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அட்டையை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் இளவரசரான ஹரி மேகன் தம்பதியினர்கள் தற்போது அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதியருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக லில்லி பெட் டயானா மவுண்ட்பேட்டன் வின்ஸ்டர் என்னும் அழகான 2 ஆவது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஹரி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தனது 2 ஆவது 6 மாத குழந்தை உட்பட அனைவரும் இருக்கும் குடும்ப புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அட்டையை வெளியிட்டுள்ளார்.
மேலும் இங்கிலாந்து இளவரசர் ஹாரி தன்னுடைய 2 ஆவது பெண் குழந்தையின் புகைப்படத்தை 6 மாதங்களுக்கு பின்பாக தற்போது முதன்முதலாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.