பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியால் அமெரிக்காவில் மற்றொரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது
இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் ஓப்ரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டி அரச குடும்பத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் புரோக்டர் & கேம்பிள் என்ற அமெரிக்க நுகர்வோர் பொருட்கள் நிறுவனமும், ஹரி-மேகன் தம்பதியும் சேர்ந்து பெண்களுக்காக, சிறுமிகளுக்காக வருங்காலத்தை சிறப்பானதாக மாற்றவும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவும், அதிக கருணை கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்காகவும் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
All of us at P&G are beyond excited to share our new partnership with Archewell Foundation, the non-profit created by Prince Harry and Meghan, The Duke and Duchess of Sussex. Together, we’re focused on building more compassionate communities around the world. #LeadWithLove pic.twitter.com/dMpvzl1eVL
— Procter & Gamble (@ProcterGamble) May 11, 2021
இந்நிறுவனத்தின் மீது PETA என்ற விலங்கு உரிமைகள் அமைப்பு புகார் தெரிவித்திருக்கிறது. மேலும் மேகன் 11 வயது சிறுமியாக இருந்தபோது இந்த நிறுவனதினுடைய ஒரு விளம்பரத்தை எதிர்த்து கடிதம் எழுதியிருக்கிறாராம். இது போன்ற மேலும் பல சர்ச்சைகளை இந்நிறுவனம் எதிர்கொண்டுள்ளது. எனவே தான் இளவரசர் ஹரி மற்றும் மேகன் இந்த நிறுவனத்துடன் சேர்ந்து பணியாற்றப்போகும் தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.