Categories
உலக செய்திகள்

“அவங்க ரொம்ப நாளாவே பொய் தான் சொல்லிட்டு இருக்காங்க”… வெளியான மேகனின் பேட்டி வீடியோ… அதிர்ச்சியில் ராஜ குடும்பத்தினர்…!!

பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வின்ஃப்ரேக்கு  அளித்துள்ள பேட்டி அரண்மனை வட்டாரத்திற்கு  தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jason Knauf என்ற நபர் மேகனின் முன்னாள் உதவியாளராக பணிபுரிந்தார். தற்போது அவர், அரண்மனையில் மேகன் தனது உதவியாளர்களை மிகவும் கொடுமைப்படுத்துவார் என்று ” The Times” பத்திரிகையில் புகார் அளித்திருந்தார். அதனால் பிரிட்டன் மகாராணியார் ஹரி- மேகன் தம்பதி மீது முறையான விசாரணை ஒன்று நடக்க வேண்டும் என்று கூறினார். மகாராணியரின் அந்த அறிவிப்பு வெளியானதுமே அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹரி- மேகன் தம்பதி பங்கேற்ற பேட்டியின் ஒரு பகுதி வெளியாகியுள்ளது.

அதில் ராஜ குடும்பம் நீண்ட நாட்களாக பொய் பேசி வருகின்றனர் என்று மேகன் கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேகனின் இந்த கூற்று ராஜ குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஓபரா வின்ஃப்ரே மேகனிடம்  நீங்கள் இன்று பேசும் உண்மையை அரண்மனை வட்டாரம் கேட்டு கொண்டிருக்கும். அதனை எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்கிறார்.

அதற்கு பதிலளித்த மேகன்,  ராஜ குடும்பம் எங்களை பற்றி  நீண்ட நாட்களாகவே பொய் தான் கூறி வருகிறது. அதனை கேட்டு நாங்கள்  எப்போதும் அமைதியாக இருப்போம் என்று அவர்கள் எப்படி நினைக்கலாம்? அது எனக்கு புரியவில்லை என்று கூறுகிறார் . இந்நிலையில் அரண்மனையில் வேலை செய்த ஊழியர்கள் பலர் அரண்மனையில் ஹரியும் மேகனும் சேர்ந்து எங்களை நடத்திய விதத்தில் நாங்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டோம் என்று புகாரளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |