ஹரி நாடார் மற்றும் வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகவுள்ள படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு அதிகளவு பிரபலமடைந்தார் . இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் . இதனிடையே வனிதா தனது யூடியூப் சேனலுக்கு உதவி செய்த பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார் . தற்போது வனிதா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
Pooja today…filming starts… pic.twitter.com/c0Ev0AjRYv
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) February 27, 2021
சமீபத்தில் ஆதாம் தாசன் இயக்கத்தில் ‘அனல் காற்று’ என்ற படத்தில் வனிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது . இந்நிலையில் நடிகை வனிதா முத்தமிழ் வர்மா இயக்கத்தில் ‘2கே அழகானது காதல்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கதாநாயகனாக நடிக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.