ஹரிமேகன் தம்பதியினர் மீது ராஜகுடும்பம் நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் ஹரி. இவர் ராஜ குடும்பத்தின் வழக்கத்திற்கு மாறாக விவாகரத்தான மேகன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருந்த போதிலும் ராஜ குடும்பம் அவரை ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து ஹரி மேகனை அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்ததிலிருந்தே ராஜ குடும்பத்தில் சண்டையும் சச்சரவுமாக இருந்தது. இதனை தொடர்ந்து ஒரு நாள் ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர். அவர்கள் இருவரும் அரண்மனையை விட்டு வெளியேறிய பின்னும் ஹரிமேகன் தம்பதியினர் ராஜ குடும்பத்தை விமர்சித்து வந்தனர். அதிலும் ஓபரா போட்டியில் அனைவரின் முன்பாக வெளிப்படையாக ராஜ குடும்பத்தை அவமதித்தனர்.
மேலும் ஹரிமேகன் தம்பதியினரின் மகனான ஆர்ச்சியின் நிறம் குறித்து ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் விமர்சித்ததாக கூறியதை கேட்டு மகாராணியார் மட்டுமின்றி அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் மகாராணியார் அவர்கள் பேரன் ஹரியின் மீது அன்பை பொழிந்தார். இதனை அடுத்து ஹரிமேகன் தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண்குழந்தை ஓன்று பிறந்தது. அந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டு ராஜ குடும்பம் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து கூறியது. ஆனால் அப்போதும் அவர்கள் மனம் மாறவில்லை. இதனை தொடர்ந்து ஹரியும் மேகனும் FINDING FREEDOM என்ற சுயசரிதை புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளனர். அந்த புத்தகத்தில் கூடுதலாக ஒரு அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அதில் அவர்களின் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்து ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் இனவெறுப்பு தாக்குதலை குறித்து பேசியுள்ளதாகவும் அதற்காக அவரின் மீது அளிக்கப்பட்ட புகாரை மகாராணியார் கண்டு கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனை கேள்விப்பட்ட மகாராணியார் பொறுமை காத்தது போதும் என்று ஹரிமேகன் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க அரண்மனையில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஹரிமேகன் புத்தகத்தை வெளியிட இருக்கும் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த புத்தகத்தில் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டு, அவர் மீது நேரடியாக அதுவும் அவதூறாக குற்றம் சாட்டப்பட்டிருப்பது அவரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையின் விதிகளை மீறிய செயலாகும் என்று கூறப்படுகிறது.