வித்தியாசமான கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் நடித்த பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, இஸ்பேட் ராஜாவும் இளையராணியும் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதை தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் வித்தியாசமான கெட்டப்பில் போட்டோ ஷுட் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/COP4zi_hfW7/?igshid=1ll4xrx4tttza