நேர்காணலில் ஹரியும்-மேகனும் கூறிய குற்றச்சாட்டால் அவர்கள் மீது எனக்கு கோபமில்லை என்றும் வருத்தம் தான் இருக்கிறது என்றும் பிரிட்டன் மகாராணி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் ஓப்ரா வின்ப்ரேக்கு அளித்த பேட்டி ஒளிபரப்பப்பானது. அந்த பேட்டியில் தம்பதியர் இருவரும் ராஜ குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர். இந்த பேட்டி உலகிலுள்ள பல்வேறு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்த பேட்டியில் ராஜ குடும்பம் இனப்பாகுபாடு பார்க்கின்றனர் என்று மேகன் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனால் இனப்பாகுபாடு பற்றிய கருத்தை தெரிவித்த நபர் தொடர்பாக தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று பிரிட்டன் மகாராணியார் சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில் மகாராணியார், ஹரியும்-மேகனும் எப்பொழுதுமே எனது அன்புக்குரியவர்கள் தான் என்று கூறியதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் இருவரும் நேர்காணலில் கூறிய தகவலால் எனக்கு அவர்கள் மீது கோபம் இல்லை என்றும் , ஆனால் வருத்தம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஹரி -மேனனுடன் நான் எப்போதுமே இருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். அவர்கள் மீது வருத்தம் இருக்கிறது என்று கூறிய மகாராணியார் மேகன் அரண்மனை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மீண்டும் ஹரியுடன் திரும்பி வந்தால் நான் ஏற்க தயாராகத்தான் இருக்கிறேன் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.