பிரிட்டன் இளவரசர் ஹரி தன் இரண்டாவது குழந்தைக்கு லிலிபெட் என்று மகாராணியரின் செல்லப்பெயரை சூட்டியது, அவரை அவமதிக்கும் செயல் என்று ராஜ குடும்ப நிபுணர் கூறியுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு “லிலிபெட் லில்லி டயானா” என்று ஹரியும் மேகனும் பெயர் சூட்டியுள்ளார்கள். அதாவது டயானா என்பது ஹரியின் தாயான இளவரசி டயானாவை கவுரவிக்க சூட்டப்பட்டது.
மேலும் மகாராணியாரின் செல்ல பெயரான லிலிபெட் என்று சூட்டியதால், மகாராணியார் மகிழ்ச்சி அடைவார் என்று கூறப்பட்டு வந்தது. எனவே அரச குடும்பத்தினருக்கும் ஹரிக்குமான பிரச்சனை முடிவுக்கு வரும் என்றும் கூறப்பட்டது. அதாவது மகாராணியின் குழந்தைப்பருவத்தில் எலிசபெத் என்ற பெயரை உச்சரிப்பது சிரமமாக இருந்ததால், அவரின் தாத்தாவான ஐந்தாம் ஜார்ஜ், “லிலிபெட்” என்று செல்லமாக அழைப்பாராம்.
மேலும் மகாராணியின் கணவரான இளவரசர் பிலிப்பும், மனைவியை செல்லமாக லிலிபெட் என்று தான் அழைப்பாராம். எனவே மகாராணியார், தாத்தா மற்றும் தன் கணவர் மட்டுமே செல்லமாக அழைத்த பெயரை, குழந்தைக்கு வைத்திருப்பதால், தன் தனிப்பட்ட பெயரை பயன்படுத்தியதால், தன்னை அவமதிப்பதாக நினைப்பார், மேலும் வருத்தப்படுவார் என்று அரச குடும்பத்தின் நிபுணர் Angela Levin கூறியுள்ளார்.