Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: WHO நிர்வாக குழு தலைவரானார் ஹர்ஷ வர்தன் …!

உலக சுகாதார நிறுனத்தின் நிர்வாகக்குழு தலைவராக இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதவியேற்றுக் கொண்டார்.

உலக சுகாதார மையத்தின் இரண்டு மிகப்பெரிய அவைகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கக்கூடிய நிர்வாக குழு தலைவராக இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்ட ஹர்ஷ்வர்தன் தற்போது பதவி ஏற்றுள்ளார். உலக சுகாதார அமைப்பை பொறுத்தவரை இரண்டு மிக முக்கிய பிரிவாக உள்ளது.  ஓன்று உலக சுகாதார அமைப்பின் கீழ் சுகாதார சபை இந்த அவையில் 194 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மற்றொன்று நிர்வாகக் குழு,  நிர்வாக குழுவில் 34 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன.

இதன் அதிகாரம் என்னவென்றால் உலக சுகாதார அமைப்பின் கொள்கைகளை வகுப்பதிலும், நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பதிலும் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடியது நிர்வாகக்குழு தான். இந்த சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் பொறுப்பானது இந்தியாவிற்கு மூன்றாண்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த மூன்று ஆண்டுகளுக்கு ஒருமனதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இரு தினங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார். சுகாதார சபையின் இருக்கக்கூடிய 194 நாடுகளும் ஒருமனதாக தேர்வு செய்தனர். தற்போது காணொலிக் காட்சி மூலமாக  பதவி ஏற்றுக்கொண்டார்.

Categories

Tech |