தெலுங்கானாவில் பேஸ் புக் நண்பரான 10 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் ஹர்ஷினி மாணவி பேஸ்புக் மூலம் 27 வயதான நவீன் ரெட்டி என்பவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதையடுத்து ஒருநாள் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி இருவரும் கடந்த 27-ஆம் தேதியன்று சங்கரய்ய பள்ளி குடியிருப்புக்கு அருகே இருக்கும் ஒரு பாழடைந்த இடத்திற்கு பின்னால் தனியாக சந்தித்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த நவீன் அந்த மாணவியை கீழே தள்ளியுள்ளார். கீழ விழுந்த சிறுமிக்கு தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் கீழே சிந்தியதால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனிடையே நீண்ட நேரமாகியும் தனது மகள் வீட்டுக்கு வரவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை வலைவீசி தேடி வந்தனர். விசாரணையில் சிறுமி நவீன் உடன் சென்றது தெரியவந்தது. பின்னர் அவனை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்ததில் நடந்தவற்றையெல்லாம் ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து நவீனை போலீசார் கைது செய்த பின் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை அந்த இடத்தில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட நவீனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.