Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை… ட்விட்டரில் பகிர்ந்த அழகிய புகைப்படம்…!!

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவிற்கு தற்பொழுது ஆண் குழந்தை பிறந்துள்ளது.தன்னுடைய குழந்தையின் கையை பிடித்தவாறு டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து, இருவரும் ஒன்றாக உள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கர்ப்பமாக உள்ள நடாசாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தனர். தங்களது குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், உங்கள் வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களையும் வேண்டுவதாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரவலாக இருந்தது.

இந்நிலையில், பிறந்த குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டுள்ள படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஹர்திக் பாண்டியா தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையறிந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்ட ஏராளமானோர் ஹர்திக் பாண்டியாவிற்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

https://twitter.com/hardikpandya7/status/1288778836872634368

Categories

Tech |