நடிகை இலியானா தனது கர்ப்பத்தை கலைத்து விட்டார் என்று பரவி வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான கேடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இலியானா நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இதையடுத்து தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் நடித்து வந்த இலியானா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவரை காதலித்து வருவதாக உறுதி செய்தார்.
ஆகையால் இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது.ஆனால் நடிகை இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் இடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும் நடிகை இலியானா கர்ப்பமாக இருந்ததாகவும், அவர் கருக்கலைப்பு செய்துகொண்டு காதல் தோல்வி காரணமாக மன உளைச்சலில் தற்கொலை முயற்சிக்கும் ஈடுபட்டார் என்று செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை இலியானா இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, நான் கர்ப்பமாக இருந்ததாகவும், கருக்கலைப்பு செய்து விட்டேன் எனவும் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலை கண்டு வருத்தம் அடைந்துள்ளேன். மேலும் நான் தற்கொலைக்கு முயன்றதாகவும் பேசி வருகின்றனர். நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவும் இல்லை. தற்போது உயிருடன் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.