Categories
இந்திய சினிமா சினிமா

என்னாது!…. நடிகை ஹன்சிகா 13 படங்களில் கமிட்டாகியுள்ளாரா….? ஓ அப்ப இதனால தான் ஹனிமூன் போகலையா…..!?!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் சமீபத்தில் தன்னுடைய காதலர் சோகேல் கத்தூரியாவை ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவுக்கு திருமணம் முடிந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் ஹன்சிகாவின் தாய் மோனா என் மகள் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்துவார் என்று கூறியுள்ளார். நடிகை ஹன்சிகா நிறைய படங்களில் கமிட்டாகியுள்ளதால் தேன் நிலவுக்கு செல்வதை கூட ஒத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் தாயார் மோனா இது தொடர்பாக சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய மகளுக்கு திருமணம் நடந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவள் விருப்பப்பட்டவரையே மணம் முடித்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். ஹன்சிகா கைவசம் தற்போது 4 தமிழ் படங்களும், 2 தெலுங்கு படங்களும் இருக்கிறது. அதோடு ஓடிடி தளத்துக்காக 7 புதிய படங்களிலும் ஹன்சிகா நடிக்க இருக்கிறார். மேலும் திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா தீவிரமாக சினிமாவில் கவனம் செலுத்துவார் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |