நடிகை கங்கனா ரனாவத் அரசியலில் ஈடுபடுவது குறித்து விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “தலைவி” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கங்கனா ரனாவத் பேசியதாவது, நான் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசி வருகிறேன். குறிப்பாக விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து வந்தேன்.
இதையெல்லாம் பார்த்து எனக்கு அரசியலில் ஈடுபட ஆசை ஏற்பட்டுவிட்டது என்று பலபேர் பேசி வருகின்றனர். ஆனால் அப்படி எந்த ஒரு எண்ணமும் எனக்கு இல்லை. அரசியல்வாதியாகவும் விருப்பமில்லை. எனக்கு தோன்றிய கருத்துக்களை நான் நேர்மையாக ஒரு சாதாரண பெண்ணாகத்தான் கூறி வருகிறேன்.
இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நேர்மையாக பேசி வருவது பிடிக்காத சிலர் என்னை அவதூறாக பேசி வருகின்றனர். என் மனதில் எந்த அரசியல் ஆசையும் இல்லை. எந்த உள்நோக்கமும் இல்லை”என்று கூறியுள்ளார்.