பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. இவர் இந்தாண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது முதுகில் காயமடைந்தார். அதன்பின் காயம் காரணமாக அவர் பாகிஸ்தான் அணி பங்கேற்ற எந்தவொரு தொடரிலும் இடம்பெறாமல் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியுடனான டி20 தொடரில் விளையாடவுள்ளது. ஆனால் ஹசன் அலி முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த தொடரிலும் இடம்பிடிக்க மாட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியதின் அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஹசன் அலிக்கு ஏற்பட்டுள்ள காயம் இன்னும் குணமடையாத காரணத்தால் அவரால் இத்தொடரிலும் பங்கேற்க இயலாது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மேலும் ஓய்வு தேவைப்படுகிறது எனத் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிகிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான சர்ப்ராஸ் அகமதுவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி டெஸ்ட் கேப்டனாக அசர் அலியையும், டி20 கேப்டனாக பாபர் அசாமையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Pakistan names exciting young fast bowling stars Musa and Naseem for Australia Tests
More ▶️ https://t.co/W2J7CSdTl6#AUSvPAK pic.twitter.com/A3fXJN0Ajg
— PCB Media (@TheRealPCBMedia) October 21, 2019