திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெண்கள் பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ஆண்கள் பெண்களை அவமரியாதியாக பேசினால் அது அவர்கள் வளர்ந்த விதத்தையும் நச்சு சூழலையும் காட்டுகிறது. ஆண்கள் பெண்ணின் கர்ப்பப்பையை அவமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் தாங்கள் கலைஞரை பின்பற்றுவதாக கூறுகிறார்கள். இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் நடக்கும் புதிய திராவிட மாடலா என்று பதிவிட்டுள்ளார். அதோடு கனிமொழியையும் குஷ்பூ டேக் செய்து பதிவிட்டு இருந்தார்.
இதனால் தற்போது திமுக கட்சியின் துணை பொது செயலாளரும், எம்.பியுமான கனிமொழி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பெண்ணாகவும் ஒரு மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று யார் செய்தாலும் அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் இப்படிப்பட்ட பேச்சுகளை கண்டிப்பாக பொறுத்துக் கொள்ளவே முடியாது. திமுக கட்சியும் பொறுத்துக் கொள்ளாது. என்னுடைய தலைவர் முதல்வர் ஸ்டாலினின் காரணமாக என்னால் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுகளை மையப்படுத்தி நடிகை கஸ்தூரி ஒரு ட்வீட் பதிவை போட்டிருந்தார். அதில் அருவருக்கத்தக்க ஒரு ஹேஷ்டேக்கையும் வெளியிட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை ஷர்மிளா ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கஸ்தூரி போட்ட ஹேஷ்டைக்கை கொண்டு வந்து உங்களுடைய பேச்சு கண்டிக்கத்தக்கது மற்றும் மன்னிக்கப்பட வேண்டியது. நீங்கள் போட்ட ஹேஷ்டேக்கை சங்கிக் குழு இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நடிகை கஸ்தூரியும் ஒரு டீவிட் பதிவை போட்டுள்ளார்.
Condone means to accept and encourage.
Condemn means to protest.
Thank God she didn't write Condom.
Is she real Doctor or kryes vasoolraja type dravidian model?
And thanks for admitting 'dravidia' is a shameful concept. https://t.co/TAs5SVMLri— Kasturi (@KasthuriShankar) October 27, 2022
அதில் கண்டனம் என்றால் மன்னிப்பு என்பது பொருள். நல்ல வேளை கண்டனம் என்பதற்கு பதிலாக அவர்கள் காண்டம் என்று எழுதவில்லை. அவர் உண்மையான டாக்டரா அல்லது வசூல்ராஜா மாதிரியான திராவிட மாடலா. எப்படி இருந்தாலும் சரி திராவிடம் என்பது ஒரு வெட்கக்கேடான வார்த்தை என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். மேலும் டாக்டர் ஷர்மிளா மற்றும் கஸ்தூரியின் பதிவுகள் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
That speech was reprehensible & deserves to be condoned madam.
However , I wish to draw your attention to the hashtag #திராவிடியா_பசங்க that was initiated by @KasthuriShankar & is being trended by the Sanghi stock.
I do hope you will condone d same, after all abuse is abuse https://t.co/K8OKqPGxmS
— Dr M K SHARMILA (@DrSharmila15) October 27, 2022