Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஹாட்ரிக் வெற்றி”…. ஆனா அதிமுக கூட்டணி ரத்து?…. அண்ணாமலையின் அறிவிப்பால் கடும் ஷாக்கில் EPS, OPS…!!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூச்சல்கள் அதிகரித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறிய நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அண்ணாமலை நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் வரும் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னையில் நேற்று பாஜக நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழகத்தில் பாஜக மகத்தான வெற்றியை பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் தற்போது இருந்தே கடுமையான உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். அதிமுக தற்போது பிளவுபட்டு இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இதனால் ஓபிஎஸ் வாழ்க, இபிஎஸ் வாழ்க என்று அவர்கள் பின்னால் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பின்னால் செல்வதை பொதுமக்களும் விரும்ப மாட்டார்கள். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு கணிசமான வெற்றிகளை பெற்றது. இதை உணர்ந்து அனைத்து நிர்வாகிகளும் செயல்பட வேண்டும். மேலும் பாஜக ஹாட்ரிக் வெற்றியை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |