Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறுப்பு கூடிகிட்டே போகுது..! மக்களும் ஆத்திரத்துல இருக்காங்க.. அரசை கடுமையாக விமர்சித்த வைகோ…!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜிஎஸ்டி வரியை உயர்த்தி மிகப்பெரிய பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கி  இருக்கிறார்கள். உணவு பண்டங்களுக்கு கூட ஜிஎஸ்டி போட்டுள்ளார்கள். பேக் பண்ணுகின்ற பொருட்களுக்கு போடவில்லை என்று சொன்னார்கள். பேக் பண்ணாத பொருட்களுக்கு போடல என சொன்னார்கள்.பேக் பண்ணாம தான் எல்லாம் வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களெல்லாம் பொதுமக்கள் தான். ஆக இந்த ஜிஎஸ்டி என்றாலே பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்களே தவிர,  அதானிகளோ, அம்பானிகளோ அல்ல.சாதாரண ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் மாத சம்பளம் வாங்குகிறவர்கள், கூலி வேலை செய்பவர்கள்,  இப்படிப்பட்ட ஏழை எளிய மக்களை தான் இந்த அரசினுடைய திட்டங்கள் பாதிக்கிறது என்பதை நாங்கள் திட்டவட்டமாக எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறோம். மக்களும் அந்த ஆத்திரத்தில் தான் இருக்கிறார்கள்.

இன்றைக்கு பெட்ரோல், டீசல், கேஸ் விலை அதிகரிப்பினால் எல்லா பொருள்களிலும் விளையும் அதிகரிக்கிறது. ஆகவே இந்த விலை அதிகரிப்பு நடுத்தர மக்களையும், அடித்தட்டு மக்களையும் கடுமையாக பாதிக்கின்றது. எனவே இந்த மத்திய அரசு மீது, மோடி அரசு மீது, மக்களுக்கு வெறுப்பு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கலாம் என தெரிவித்தார்.

Categories

Tech |