ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நீதிமன்றம் தலையிட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 500க்கும் மேற்பட்ட சட்ட மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் மதராஸில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு குற்றவாளிகள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு பாப்டேவிற்கு 500க்கும் மேற்பட்ட சட்ட மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மருத்துவமனைகள் மற்றும் காவல் துறை பின்பற்றபட வேண்டிய நெறிமுறைகாண வழிகாட்டுகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். மேலும் உத்தரபிரதேச காவல்துறை, ஹத்ராஸ் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையான சிறப்பு விசாரணை குழு விசாரணைக் மேற்கொள்ள உத்தரவிட கூறி கேட்டு கொண்டனர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த 2013 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நிர்பயா நிதியில் பயன்படுத்தப்படாத நிதியை பயன்படுத்துமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் சட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.