உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்சில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரிடம் 5 மணி நேரத்திற்கும் மேல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த மாதம் பழங்குடியினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அண்மையில் இளம்பெண் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த இளம்பெண் குடும்ப உறுப்பினர்களிடம் 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்ற வேண்டுமென அதிகாரிகளிடம் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.