Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ.யே தொடர்ந்து விசாரிக்கும்…!!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ அமைப்பை தொடர்ந்து விசாரிக்கும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம்  ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த மாதம் 14ஆம் தேதி நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசரகதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று உத்தரவை பிறப்பித்தது.

அதில் ஹத்ராஸ் பாலியல் சம்பவத்தை சிபிஐ அமைப்பு தொடர்ந்து  விசாரிக்கும் என்றும், அலகாபாத் உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணைக்குப் பின் இந்த வழக்கை உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

Categories

Tech |