ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் சாதிய வன்மம் கொண்ட கொடூரர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட இளம் பெண்ணின் உடலை ஹத்ராஸ் போலீசார் பெற்றோரின் ஒப்புதல் இன்றி நள்ளிரவில் அவசர அவசரமாக எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஹத்ராஸ் காவல்துறை வழக்கை கையாண்ட விதம் கண்டிக்கதக்கது என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இதையடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்ற பட்டது. நேற்று முன்தினம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை, கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளனர்.