Categories
சென்னை மாநில செய்திகள்

“அந்த மனசு தான் சார்… கடவுள்” கோவிலம்பாக்கத்தில் 5,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவிய C.மணிமாறன்

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000 குடும்பங்களுக்கு அதிமுக மாணவர் அணி துணை செயலாளர் கோவிலம்பாக்கம் திரு. C மணிமாறன் அவர்களின் ஏற்பாட்டில் மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வில் சிதலப்பாக்கம் ச.ராஜேந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் சமைக்க தேவையான பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கினார். ஊரடங்கு நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் சமூக பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிகழ்வில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு. நிகழ்வில் சரியான சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றனர். மேலும் சமூகத்தின் மீது உள்ள பொறுப்பு மற்றும் அர்பணிப்பால் செயல்பட்டு தேவை அறிந்து ஊரடங்கு ஆரம்பித்த நாளிலிருந்தே Sanitiser, Mask போன்றவற்றை கொடுத்து உதவி வரும் திரு. C மணிமாறனுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

வெளிய வர முடியாத சூழ்நிலையில் உள்ள சில குடும்பங்களுக்கு வீட்டிலேயே சென்று தேவையான பொருட்களை கொடுத்து உதவி செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |