சுகப்பிரசவம் பெற வேண்டுமென்றால் நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
சுகப்பிரசவம் என்பது பெண்களின் மறுபிறவி என்று சொல்வார்கள். இன்று பல பிரசவம் முறைகள் இருந்தாலும் சுகப்பிரசவம் போல எதுவும் கிடையாது, சுகப்பிரசவம் என்பது அம்மா மற்றும் குழந்தைகள் ஆகிய இருவருக்கும் ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்தை தரும். சுகப்பிரசவம் ஆக வேண்டுமென்றால் கர்ப்பிணி பெண்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஆலோசனையை முதலில் பெறவேண்டும். நமது மருத்துவர்கள் எப்போதுமே நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான்.
மருத்துவமனைக்கு செல்வதை தவிருங்கள், முடிந்தவரை பெரியோர்களின் ஆலோசனைப்படி கர்ப்ப காலத்தில் நடந்து கொள்ளுங்கள். ஏதாவது ஏற்பட்டால் வீட்டு வைத்தியத்தை செய்ய முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் சுகப்பிரசவம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் மன உறுதியோடு முதலில் இருங்கள். மனதளவில் உறுதியாகும் போது உங்கள் உடலும் ஆன்மாவும் அத்தனையும் நாளடைவில் விரும்ப தொடங்கும். நீங்கள் எதிர்பார்த்த சுகப்பிரசவம் நடக்கும்.
இரும்புச்சத்து, கால்சியம். புரதம், நார்ச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இந்த மருந்து மூலம் நீங்கள் நினைத்தது நடக்கும். சுகப்பிரசவம் ஏற்படாமல் போவதற்கு உடல் உழைப்பு இன்மை மிக முக்கிய காரணம். நீங்கள் எவ்வளவு உடலுக்கு வேலை கொடுக்கிறீர்களோ அவ்வளவு சுகப்பிரசவம் நடக்கும். .
சிறிய வீட்டு வேலைகள், உடற்பயிற்சிகளை கையாளுங்கள். தினமும் ஒன்று முதல் இரண்டு மணி நேரமாவது நடைபயிற்சி மேற்கொள்ளவேண்டும். சில குறிப்பிட்ட ஆசனங்களை மேற்கொள்வது கர்ப்பிணி பெண்களின் இடுப்பு மற்றும் முதுகு எலும்பு வலுவடையும். நாளடைவில் எலும்புகள் நன்கு நெகிழத் தொடங்கும். இதனால் சுக பிரசவம் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது.