கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு சலுகை அறிவிப்பை வழங்கி வருகின்றார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள 11 IAS அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தமிழக முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் பல்வேறு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அந்தவகையில் வாகன ஓட்டுநர் தங்களின் ஓட்டுநர் உரிமங்கள், தகுதிச் சான்றுகளை புதுப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.