தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, 2021 வரை தமிழகத்தினுடைய உள்துறை ஸ்ட்ரக்சர் வேற மாதிரி இருந்துச்சு. ப்ரொபஷனல் தான் உள்துறையில் இருப்பாங்க. சாலிட் ப்ரொபஷனல்… 20 ஆண்டுகள் 30 ஆண்டுகள் உள்துறையில் இருந்தவங்க, கவுண்டர் டெரரிஸம்ல பெயர் வாங்கினவங்க,
நேரடியாக அஜித் தோவல் அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசக்கூடிய தன்மை இருக்கக்கூடிய தமிழக காவல்துறை அதிகாரிகள், டெல்லியில் அவங்க போன் பண்ணினாலே, சீரியஸ் ஆக எடுக்கக்கூடிய நண்பர்கள் தான் உள்துறையில் இருந்தாங்க. அதனாலதான் தமிழக உள்துறை நாட்டிலேயே சிறந்ததாக இருந்தது.
ஆனால் முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற பிறகு உள்துறை நடவடிக்கை என்னவென்றால் ? அண்ணாமலை எத்தனை இட்லி காலையில் சாப்பிடுகிறார் ? மூன்று சட்னி வச்சு சாப்பிடுறாரா ? ரெண்டு சட்னி வைத்து சாப்பிடுகிறாரா ? எங்கெல்லாம் போறாரு ? எத்தனை உப்பு போட்டு இருக்காரு?
காலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நண்பர்களுக்கு தெரியும். இன்டலிஜென்ஸ் ஆபீஸ்ல இருந்து எத்தனை பத்திரிகையாளர் நண்பர்களுக்கு whatsapp குரூப்பில் தொந்தரவு கொடுக்குறாங்க. சின்னவர் எங்க போறாரு ? ஹைலைட் பண்ணுங்க. பெரியவர் எங்க போறாருன்னு நியூஸ் போடுங்க.. இதுதான் இப்போது உள்துறையினுடைய வேலையாக இருக்கிறதே தவிர, என்ன நடக்கிறது ? என்று பார்க்கக்கூடிய ப்ரொபஷனல் இல்ல என விமர்சனம் செய்தார்.