தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை பதித்துள்ளார். இவர் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் முக்கியமான இடத்தில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த 1994-ம் ஆண்டு லலிதா குமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இவர்களின் திருமண வாழ்க்கை சுமார் 15 வருடங்கள் நீடித்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தில் முடிந்தது. அதன்பின் கடந்த 2010-ம் ஆண்டு பொன்னி வர்மா என்ற பெண்ணை பிரகாஷ்ராஜ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.