அமலாபால் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர் அமலாபால். இவர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான ”மைனா” படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, இவர் விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். கடைசியாக இவர் நடிப்பில் ராட்சசன், ஆடை போன்ற படங்கள் வெளியாகின.
தமிழில் பெரிதும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது இவர் தெலுங்கு திரையுலகில் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.