ரக்ஷா பந்தனை முன்னிட்டு தொகுப்பாளினி பிரியங்கா தனது தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ஸ்வாரசியமாகவும், கலகலப்பாகவும் செல்லும். மேலும் இவரது நகைச்சுவையான பேச்சிற்க்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவர் தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரியங்கா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பி ரோஹித் தேஷ்பாண்டே உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் பிரியங்காவின் தம்பியா இவர் என்று கமண்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CS4NaDzplr8/