நடிகர் சஞ்சீவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய்யின் நண்பர் சஞ்சீவ் என அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து, திருமதி செல்வம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் இவர் சின்னத்திரையில் பிரபலமானர். இதனை தொடர்ந்து இதயம், அவள், யாரடி நீ மோகினி போன்ற சீரியல்களில் நடித்தார்.
தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ”பிக்பாஸ்5 ” நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். இந்நிலையில், இவர் தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.