முன்னணி நடிகை சமந்தாவின் அழகிய வீட்டின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் எனும் வெப்சீரிஸிற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார். இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது வாழ்ந்து வரும் பிரம்மாண்டமான வீட்டின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது.